மாவட்ட செய்திகள்

பணியில் இறந்த போலீசாருக்கு அஞ்சலி + "||" + Tribute to the policeman who died on the job

பணியில் இறந்த போலீசாருக்கு அஞ்சலி

பணியில் இறந்த போலீசாருக்கு அஞ்சலி
பணியின் போது இறந்த போலீஸ்காரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெல்லை:

சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முகம்மது ஆரிப், உவரி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய ஆறுமுகம் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் இறந்தனர்.

இதையடுத்து, பணியில் இறந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  நடந்தது. இறந்த போலீசாரின் உருவப்படங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையகம்) சுப்பாராஜு, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நெல்லை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிளாஸ்டன் ஜோஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாலை அணிவித்து மரியாதை
மாலை அணிவித்து மரியாதை
2. அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு மரியாதை
அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு மரியாதை
3. ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள்
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

அதிகம் வாசிக்கப்பட்டவை