மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பசு சாவு + "||" + Cow death due to electric shock

மின்சாரம் பாய்ந்து பசு சாவு

மின்சாரம் பாய்ந்து பசு சாவு
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து பசு ஒன்று பலியானது.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 55). 

இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று 8 மாத சினையாக இருந்தது.

 இந்தநிலையில் அவரது பசுமாடு, அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் நேற்று முன்தினம் மாலை மேய்ந்து கொண்டிருந்தது. 

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்தது. 

இதில் பசு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனது.

 இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.