மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீ + "||" + The fire that burned about the cell phone tower

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீ

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீ
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் செல்போன் கோபுரத்தில் தீப்பிடித்தது.
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் அருகில், செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த கோபுரத்தின் கீழ்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்தது. 

இதை பார்த்த பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

இருப்பினும் செல்போன் கோபுரத்தில் செல்லும் மின்கம்பிகள், கேபிள்கள் தீயில் கருகின. 


இதனால் பெரும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர், மஞ்சள்பரப்பு, வெள்ளைக்கரை, புல்லாவெளி, கட்டக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.