மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில்கொரோனாவுக்கு வாலிபர் பலிஇறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு + "||" + corona increases

கிருஷ்ணகிரியில்கொரோனாவுக்கு வாலிபர் பலிஇறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில்கொரோனாவுக்கு வாலிபர் பலிஇறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
வாலிபர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். உடல் நலக்குறைவு காரணமாக இவர் கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கடந்த 24-ந் தேதி உறுதியானது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் 1-ந் தேதி இரவு இறந்து விட்டார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
445 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 536 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 15 ஆயிரத்து 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 12 ஆயிரத்து 642 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 118 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
======

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
2. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி.
3. கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 423 பேர் பாதிப்பு