மாவட்ட செய்திகள்

முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை + "||" + 2 years jailed

முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி செய்த முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மன்னார்குடி;
கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி செய்த முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 
பணமோசடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 65). இவர், மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை செயலாளராக பணியாற்றினார்.
அப்போது பணம் மோசடி செய்ததாக திருவாரூர் பொருளாதார குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை மன்னார்குடி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
2 ஆண்டு சிறை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றிய பாஸ்கரன் மீதான பணம் மோசடி குற்றம் நிருபிக்கப்பட்டதால் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி.சி.குபேரசுந்தர் தீர்ப்பு கூறினார். 
இந்த வழக்கில் அரசு வக்கீல் பொற்செல்வி ஆஜராகி வாதாடினார்.