மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து + "||" + Congratulations

மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து தெரிவித்து உள்ளது.
சிவகங்கை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப்சேவியர் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள தங்களுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் கல்வி கொள்கையில் மாற்றம் என்ற சூழ்நிலையில், தமிழக மாணவர்களுக்கு சரியான வழியை தேர்ந்தெடுக்க தங்களின் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.அத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச பெண்கள் தினம்: அமீரக துணை அதிபர் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து