மாவட்ட செய்திகள்

கிருமி நாசினி தெளிக்கும் பணி + "||" + Disinfectant

கிருமி நாசினி தெளிக்கும் பணி

கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு வழக்கு விசாரணைக்காக இருவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி சித்தமருத்துவ சுகாதாரத்துறை மூலம் அனைத்து போலீசாருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
விருதுநகர் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
2. கிருமிநாசினி தெளிப்பு
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
3. கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
4. கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
5. கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.