மாவட்ட செய்திகள்

காரமடையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு + "||" + 5 pound jewelery flush with woman in Karamadai

காரமடையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

காரமடையில்  பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
காரமடையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
காரமடை

காரமடை அருகே உள்ள மங்களக்கரைபுதூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி புஷ்பராணி (வயது 51). அவர் அந்தப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்கள் புஷ்பராணியிடம் குளிர்பானம் கேட்டனர். அத்துடன் அதற்காக சில தின்பண்டங்களும் கேட்டனர். 

அவற்றை அவர் எடுப்பதற்காக கீழே குனிந்தார். அந்த நேரத்தில் அந்த 2 பேரும் புஷ்பராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.  

இது குறித்த புகாரின்பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.