மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி + "||" + Schoolgirl killed in truck crash

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலி
திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிபட்டு மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, கூலித் தொழிலாளி (வயது 37). இவருடைய மகள் அட்சயா. (15). இவர் கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மின் நகரிலுள்ள அவரது வீட்டில் இருந்து தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். 

அப்போது ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (49) ஓட்டிவந்த லாரி, திருப்பத்தூர் ெரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள்மீது  மோதியது. இதில் அட்சயா லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம்குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.