மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில்17,960 வாக்குகளை பெற்ற நோட்டா + "||" + Nota received 17,960 votes

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில்17,960 வாக்குகளை பெற்ற நோட்டா

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில்17,960 வாக்குகளை பெற்ற நோட்டா
17,960 வாக்குகளை பெற்ற நோட்டா
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 17 ஆயிரத்து 960 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர்.
வாக்கு எண்ணும் பணி
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி, சங்ககிரி விவேகானந்தா நிறுவனம், தலைவாசல் மாருதி கல்வி நிறுவனம், அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் எண்ணப்பட்டன.
இதில் சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர், சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 10 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றனர்.
நோட்டாவுக்கு ஓட்டு
இந்த நிலையில் 11 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு அதிகமானவர்கள் வாக்கு அளித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1,663 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். மேட்டூர் தொகுதியில் 2 ஆயிரத்து 247 பேரும், கெங்கவல்லி தொகுதியில் 1,251 பேரும், ஓமலூர் தொகுதியில் 1,600 பேரும் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். 
சேலம் வடக்கு தொகுதியில் 1,539 பேரும், ஆத்தூர் தொகுதியில் 1,834 பேரும், ஏற்காடு தொகுதியில் 1,979 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் 1,860 பேரும், வீரபாண்டி தொகுதியில் 1,409 பேரும், சங்ககிரி தொகுதியில்1,469 பேரும், எடப்பாடி தொகுதியில் 1,109 பேரும் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். 
11 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரத்து 960 பேர் நோட்டாவுக்கு வாக்கு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி: 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்'
தமிழகத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.