மாவட்ட செய்திகள்

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ் + "||" + Congress wins victory in Sriperumbudur constituency again after 10 years

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்
காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வபெருந்தகை அமோக வெற்றி பெற்றார். இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை 2001,2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா தொடர்ந்து 2 முறை கைப்பற்றி காங்கிரஸ் கோட்டையாக விளங்க செய்தார்.

இந்தநிலையில், 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா தோல்வியை தழுவினார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை அ.தி.மு.க. வேட்பாளர் பழனியிடம் தோல்வியை தழுவினார்.

10 ஆண்டுகள்

அதைதொடர்ந்து, தற்போது நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமை மீண்டும் பழனியை களம் இறக்கியது. எதிர்தரப்பில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை மீண்டும் களம் இறங்கினார்.

கடுமையான போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை 1,15,353 வாக்குகள் பெற்று 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 10 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் கோட்டை என அக்கட்சி மீண்டும் நிரூபித்து உள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
3. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.
4. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.