மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தாராபிஷேகம் + "||" + Tarabhishekam in Shiva temples

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தாராபிஷேகம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.  இதுவரை சுமார் 104 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளில் இருந்து சிவன் கோவில்களில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளிட்ட சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடந்தது. 

அதாவது கோவில்களில் சிவலிங்கத்திற்கு மேல் தாராபாத்திரம் பொருத்தப்பட்டு அதில் ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் காலையில் இருந்து மாலை வரை லிங்கத்தின் மீது துளித் துளியாக விழுந்து அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வருகிற 29-ந் தேதி வரை இந்த தாராபிஷேகம் நடைபெறும்.