மாவட்ட செய்திகள்

காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை + "||" + The wild elephant that damaged the guard house

காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை சேதப்படுத்தியது
கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே அள்ளூர்வயல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் தனியார் தோட்ட காவலாளியாக பணியாற்றி வருகிறார்.  வழக்கம்போல பணிக்குச் சென்றார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். 

நள்ளிரவு அப்பகுதிக்கு ஒரு காட்டு யானை வந்தது.அந்த காட்டு யானை வாசுதேவன் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த வாசுதேவன் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். 

பின்னர் அவர்கள் அந்த காட்டு யானையை துரத்தினார்கள். 
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். 

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், காட்டு யானைகள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வந்தது.
2. காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம்
மளுக்கப்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
3. காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம்
காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?
4. மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து அழைத்து சென்ற வனத்துறையினர்
மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
5. காட்டு யானை மீது தீப்பந்தம் வீச்சு: கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை
காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய வழக்கில் கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.