மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகேரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்வியாபாரி கைது + "||" + near kovilpatti, rs.1.50 lakh tobacco products seized, merchant arrested

கோவில்பட்டி அருகேரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்வியாபாரி கைது

கோவில்பட்டி அருகேரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்வியாபாரி கைது
கோவில்பட்டி அருகே, ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்டு பொருட்களை பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
போலீசாருக்கு தகவல்
கோவில்பட்டி அருகே, பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் செந்தில்குமார், சரவணகுமார், ஆனந்த்அமல்ராஜ், முகமதுமைதீன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம். அப்போது பாண்டவர்மங்கலம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவருடைய பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததுள்ளது.
வியாபாரி கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி ராஜீவ் நகர் இ.பி காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 44) என்பதும், வியாபாரி என்றும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 
அதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.