மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை + "||" + Youth murder in antecedents

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
மதுக்கூர் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
முன்விரோதம் 
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(வயது 33). இவரது மனைவி ஆனந்தா. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மாணிக்கவாசககம் மற்றும் அவரது தம்பி ஆனந்தகுமாருக்கும், அதே ஊரை சேர்ந்த ரிதிஷ்(30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதத்தில் ரிதிஷ், ஆனந்தகுமாரின் கையை வெட்டினார்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் மாணிக்கவாசகம், அவரது தம்பி ஆனந்தகுமார் இருவரும் ரிதிஷிடம் தகராறு செய்தனர். இதனால் ரிதிஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மாணிக்கவாசகம், அவரது தாய்மாமன் புண்ணியமூர்த்தி, அவரது நண்பர் செந்தில் ஆகிய 3 பேரும் அத்திவெட்டி அருகே உள்ள வாட்டாக்குடி ஏரியில் குளித்தனர். பின்னர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றனர்.
அத்திவெட்டி சின்ன ஆற்றங்கரை அருகே வந்தபோது ரிதிஷ், கருணாமூர்த்தி, மணிமாறன், மணியரசன், பெரியசாமி, கைலாசம் ஆகியோர் சேர்ந்து மாணிக்கவாசகத்தை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். 
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த புண்ணியமூர்த்தி, செந்தில் ஆகியோரை பார்த்ததும் ரிதிஷ் உள்பட 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
2 பேர் கைது 
இதுகுறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த மாணிக்கவாசகத்தின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின் ே்பரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிதிஷ், மணியரசன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 
முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.