மாவட்ட செய்திகள்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் + "||" + Drinking water is wasted due to pipe breakage

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் கீழரத வீதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் செல்லும் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள், நடந்து செல்பவர்கள் அங்கு தேங்கி கிடக்கும் நீரினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த குழாய் நீரூடன் கழிவுநீரும் சேர்ந்து விடுவதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இந்தப் பகுதியில் உடைந்து உள்ள குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் மம்சாபுரம் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா?
வெம்பக்கோட்டையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சென்ற அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சென்ற அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது.
3. கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. வீணாக ஓடும் குடிநீர்
ரோடு பாலத்தில் வீணாக ஓடும் குடிநீர்
5. குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது