மாவட்ட செய்திகள்

விபத்தில் பெண் உயிரிழந்தார். + "||" + Woman killed in accident 3 people were injured

விபத்தில் பெண் உயிரிழந்தார்.

விபத்தில் பெண் உயிரிழந்தார்.
விபத்தில் பெண் பலி 3 பேர் படுகாயம்
கொட்டாம்பட்டி,மே.
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அருவகம் (வயது 55). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தனிச்சியத்தை சேர்ந்த ரமேஷ், சொக்கம்பட்டியை சேர்ந்த மருது ஆகியோருடன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சொக்கம்பட்டி வல்லக்குடி கண்மாய் அருகே வரும்போது கொட்டாம்பட்டி நோக்கி எம்-சாண்ட் மணல் ஏற்றிவந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீடப்பட்ட அருவகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
மேலும் உடன் வந்த ரமேஷ், மருது சிறிய காயங்களுடன் தப்பினர். மோட்டார்சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் முகம்மது காயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.