மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு + "||" + Theft

வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு

வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள சேதுபதி நகரில் குடியிருந்து வருபவர் சக்திவேல் (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான திருப்பாலைக்குடிக்கு சென்றிருந்தார். நேற்று காலை ஊரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திரவுபதி அம்மன் கோவில் உண்டியல்களை தூக்கிச்சென்று பணம் திருட்டு
திரவுபதி அம்மன் கோவில் உண்டியல்களை மர்ம நபர்கள் தூக்கிச்சென்று பணத்தை திருடிச்சென்றனர்.
2. கோவிலில் ஆலயமணி- பொருட்கள் திருட்டு
செந்துறை அருகே கோவிலில் ஆலயமணி-பொருட்கள் திருட்டு போயின. மற்றொரு சம்பவத்தில் வெல்டிங் பட்டறையில் எந்திரங்களை மர்ம நபர்கள் தூக்கிச்சென்றனர்.
3. நகை, வெளிநாட்டு பணம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை, வெளிநாட்டுப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
மங்களமேடு அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.