மாவட்ட செய்திகள்

உடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார். + "||" + udumalai kupai

உடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

உடுமலை
உடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் கடந்த சுமார் 3 வருடங்களாக எந்த இடத்திலும் குப்பைத்தொட்டிகள் இல்லை. துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை மக்கும்குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து வாங்கி செல்கின்றனர்.
இந்த குப்பைகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அவை நகராட்சி வேன்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிமெண்டு ஆலைக்கு வழங்கப்படுகின்றன.
குப்பைகளுக்கு தீ வைப்பு
உடுமலை நகராட்சி பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அதேசமயம் குப்பைகள் அதிமாக சேரும் சமயத்தில் துப்புரவு பணியாளர்களே ஆங்காங்கு குப்பைகளை கொட்டி தீ வைப்பதாகவும், இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்களிடமிருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
 இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. அப்போது கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
நடவடிக்கை
உடுமலை நகராட்சி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முககவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கவேண்டும். குப்பைகளை எந்த சாலைபகுதியிலும் திறந்த வெளியில் கொட்டி தீ வைக்கக்கூடாது. அப்படி குப்பைகளுக்கு தீ வைப்பது கண்டறியப்பட்டால் அந்த துப்புரவு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களுக்கு ஏதும் சிரமம் என்றால் அந்தந்த சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களின் பணிகளை சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது துப்புரவு பணியாளர்கள், சில வீடுகளில் குப்பைகளை பிரித்து தருவதில்லை. கேட்டால் குப்பைவரி கட்டுகிறோம் என்று கூறி பிரித்துதர மறுக்கின்றனர் என்றனர். அதற்கு ஆணையாளர், இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் சுகாதார ஆய்வாளர்களிடம் தெரிவிக்கும்படி கூறினார். அத்துடன் குப்பைகளை கொண்டு செல்வதற்கு சாக்குப்பைகள் தேவை என்றும் துப்புரவு பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.