மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் ஆவடி தொகுதியை தனது வசமாக்கிய தி.மு.க. + "||" + After 10 years of struggle Avadi volume His possession of the DMK.

10 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் ஆவடி தொகுதியை தனது வசமாக்கிய தி.மு.க.

10 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் ஆவடி தொகுதியை தனது வசமாக்கிய தி.மு.க.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை பெற்று தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆவடி, 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதியில் அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹீம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அவர், ஆவடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாகவும் அமைச்சராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆவடி தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் க.பாண்டியராஜன் வெற்றி பெற்றதோடு அமைச்சராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார்.

இந்நிலையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசர், மீண்டும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் அவர், 54 ஆயிரத்து 695 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆவடி தொகுதியை தி.மு.க. கைப்பற்றியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.