மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing jewelry

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே பேளூர் நபி நாயகம் தெரு பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் அயோத்தியாப்பட்டணத்தில் ஒரு டீ கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷகிலா (வயது 49). இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள டீ கடையில் தான் தங்க உள்ளதாகவும், மனைவி ஷகிலாவை உறவினர் வீட்டில் தங்கி கொள்ளுமாறும் சாதிக் பாஷா கூறியுள்ளார். இதனால் ஷகிலா இரவு தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். பின்னர் நேற்று காலையில் ஷகிலா வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு. அதில் இருந்த 1¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
2. திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
3. வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
4. திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.