மாவட்ட செய்திகள்

டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு + "||" + Case against comedian for insulting doctors

டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு

டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு
டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வீடியோ

நகைச்சுவை நடிகர் சுனில் பால் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர்களை பற்றி இழிவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த நடிகர், "டாக்டர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இதில் 90 சதவீதம் பேர் சாத்தான்களாகவும், ஏமாற்றுக்காரர்களாக மாறிவிட்டனர். கொரோனாவால் ஏழை மக்கள் நாள் முழுவதும் அச்சத்திலேயே உள்ளனர். படுக்கை இல்லை, பிளாஸ்மா இல்லை, மருந்து இல்லை, அது இல்லை, இது இல்லை என அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர்" என கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் டாக்டர்களை இழிவுபடுத்தி உள்ளதாக அந்தேரி போலீஸ் நிலையத்தில் டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுஷ்மிதா பட்நகர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடிகர் சுனில் பால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின் வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்
மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
2. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
3. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.
4. லக்கிம்பூர் வன்முறை: அமைதியை குலைக்க முயற்சி என பிரியங்கா காந்தி மீது வழக்கு
அமைதியை குலைக்க முயற்சிக்கலாம் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு: சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருப்பதாக கல்லூரி மாணவர் கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.