மாவட்ட செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து சாவு + "||" + Death by fire

இளம்பெண் தீக்குளித்து சாவு

இளம்பெண் தீக்குளித்து சாவு
விருதுநகரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர், 
அருப்புக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் சங்கரம்மாள் (வயது 58). இவரது நான்காவது மகள் முத்துராதேவி (29). கடந்த 11 வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையை சேர்ந்த செந்தில்வேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டமுத்துராதேவி கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திருமணமாகி ஒன்றரை வருடத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் செந்தில்வேல், முத்துராதேவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். முத்துராதேவி குழந்தையுடன் தனதுதாயார் சங்கரம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு முத்துராதேவி மத்திய சேனையை சேர்ந்த கருப்பசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் மத்திய சேனையில் வசித்து வந்தார்.  கருப்பசாமி மது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை வந்தது. சம்பவத்தன்று கருப்பசாமி குடித்துவிட்டு வந்த நிலையில் முத்துராதேவி இரவு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 
பலத்ததீக்காயங்களுடன் முத்துரா தேவியை அவரது கணவர் கருப்பசாமியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
2. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. பெண் தீக்குளித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.