மாவட்ட செய்திகள்

சோளிங்கர்; பாரில் மது விற்றவர் கைது + "||" + Sholinghur; Liquor seller arrested at bar

சோளிங்கர்; பாரில் மது விற்றவர் கைது

சோளிங்கர்; பாரில் மது விற்றவர் கைது
சோளிங்கரில், பாரில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது அதனருகில் பார் உள்ளது. 

இந்த நிலையைில் டாஸ்மாக் கடை நேற்று காலை 8 மணிக்கு கடை திறந்து மாலை 6 மணிக்கு மூடிவிட்டனர். இரவு 8 மணி அளவில் கடை அங்குள்ள பாரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், தாசில்தார் ரவி, ராணிப்பேட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சத்தியபிரகாஷ் ஆகியோர் அந்த பாருக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 390 மதுபாட்டில்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். 

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்கள் விற்பனை செய்த திருவள்ளூர் மாவட்டம் அன்வர்திகான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குணா என்பவரின் மகன் கவுரி (வயது 34) என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆத்தூர்: மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
2. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3. மதுபாட்டில்கள் விற்றவர் கைது
நெல்லையில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது