மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி + "||" + Corona patient who came in auto to first-minister home

பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி

பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி
பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி
பெங்களூரு:
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நோயாளிக்கு படுக்கை கிடைக்காததால் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டுக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சில் வந்து படுக்கை கேட்டு தர்ணாவில் ஈடுபட்டு இருந்தனர். இதேபோல் மற்றொரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக அந்த வாலிபர் சிகிச்சை பெறுவதற்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை சென்று இருந்தார். ஆனால் அந்த வாலிபருக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டுக்கு ஆட்டோவில் அவர் வந்தார். 

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து கொரோனா மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு படுக்கை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியாக கூறியதால் நோயாளி அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் முதல்-மந்திரி வீட்டு முன்பு நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.