மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து + "||" + in Chennai Metro rail service canceled

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பஸ், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளதால் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அந்தவகையில் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (10-ந்தேதி) அதிகாலை 4 மணி முதல் 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் முழுஊரடங்கு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்குக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இன்று விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்களை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது என்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை: நீர்நிலைகளில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி
சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க நீர்நிலைகளில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார்.
2. சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம்
சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் மாநகராட்சி நடவடிக்கை.
3. சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்
சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்தது.
4. சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை 9 பேர் அதிரடி கைது
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை சென்னையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சென்னையில், இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.