ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்


ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 May 2021 7:57 PM GMT (Updated: 13 May 2021 7:57 PM GMT)

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் உள்ள ரேஷன் கடையின் ஊழியா்கள், கடைக்கு வரும் பொதுமக்கள், வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வெள்ளை நிறத்தில் வட்டம் வரைந்து வைத்திருந்தனர். இதில் ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை என்று வட்டம் வரையப்பட்டிருந்தது. அதன்படி அந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்து, வட்டம் இடப்பட்ட இடத்தில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்து தங்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Next Story