மாவட்ட செய்திகள்

19 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + A 70-year-old man who made a 19-year-old girl pregnant has been arrested under the Pocso Act

19 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

19 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
19 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 70 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் கர்ப்பம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர், குடும்பத்தினர் அனைவருடனும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.இந்தநிலையில் முதியவர் பன்னீர்செல்வம், 19 வயது இளம்பெண்ணை மிரட்டி, “உங்கள் குடும்பத்துக்கே நான்தான் சோறு போடுகிறேன்” என்று கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதையறிந்த இளம்பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பன்னீர்செல்வம், இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கியது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. 30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
2. மது விற்றவர் கைது
சாத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
3. கஞ்சாவுடன் 2 பேர் கைது
கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது
ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது
தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது