மாவட்ட செய்திகள்

ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன + "||" + 2 lorries loaded with 266 tonnes of oxygen arrived in Tiruvallur on a freight train from Odisha

ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன

ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன
ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயில் உதவியுடன் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தது.

ஒடிசாவிலிருந்து...

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையால் தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை.இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 2 மருத்துவ காலி லாரிகள் சிறப்பு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மீண்டும் ஒடிசாவிற்கு மேலும் 3 லாரிகளையும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்தது. மொத்தம் 5 மெடிக்கல் காலி லாரிகள் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26.6 டன் ஆக்சிஜன் வந்தது

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதியன்று திருவள்ளூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 மருத்துவ லாரிகள் ஒடிசாவில் இருந்து 26.6 டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு நேற்று திருவள்ளூர் வந்தடைந்தது.

திருவள்ளூர் கொண்டு வரப்பட்ட அந்த 2 ஆக்சிஜன் லாரிகளையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கும் ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆக்சிஜனை நிரப்பி வருவதற்காக நேற்று இரவு திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து ஒடிசாவுக்கு மேலும் 4 லாரிகள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை
தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை.
3. மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை
மத்திய பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலையில் கூலர்கள் பயன்பாட்டுக்கு அரசு நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
4. வர்த்தக கட்டிடங்களுக்கு கூடுதல் வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்கு அதிகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
5. சாருஹாசனின் ‘தாதா 87' தெலுங்கு ரீமேக் படத்துக்கு தடை
சாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் தாதா 87.