மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் சாவு + "||" + Corona

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் சாவு

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் சாவு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
193 பேருக்கு பாதிப்பு
இருந்தபோதிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. ஆரம்பத்தில் ஒன்றை இலக்கத்தில் இருந்த தொற்று கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 பேர் சாவு
இந்தநிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 264 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1527 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவிற்கு ஏற்கனவே சிகிச்சை பெற்ற வந்த மேலும் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்: கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு தமிழக அரசு உத்தரவு
தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. 27 பேருக்கு கொரோனா தொற்று
சிவகங்கை மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு 95 டோஸ் மருந்து பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 95 டோஸ் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் ஒரே நாளில் 57 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.