மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி + "||" + Corona relief event near Tirukovilur

திருக்கோவிலூர் அருகே கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

திருக்கோவிலூர் அருகே கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரனோ பாதிப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் மதுரா அரியந்தக்கா கிராமத்தில் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரனோ பாதிப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் மதுரா அரியந்தக்கா கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. கிளை செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரணம் முதல் தவணை தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கிளை அவை தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் பாண்டுரங்கன், ரமேஷ், திருமலை, பொருளாளர் கிருஷ்ணன், கணபதி, இளைஞர் அணி அமைப்பாளர் மணி, துணை அமைப்பாளர்கள் வெங்கடாசலம், பாண்டியன், காலனி பகுதி கிளை செயலாளர் மொட்டையன், பரமேஸ்வரன், பிரகாஷ் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 16 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. 2-ம் கட்ட மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று 2-ம் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
3. 3 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. மேலும் 8 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.