மாவட்ட செய்திகள்

டிராக்டர் மோதி மூதாட்டி பலி + "||" + Grandmother kills

டிராக்டர் மோதி மூதாட்டி பலி

டிராக்டர் மோதி மூதாட்டி பலி
டிராக்டர் மோதி மூதாட்டி பலியானார்
மணப்பாறை
மணப்பாறையை அடுத்த சங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 65). இவரது மகன் ராசு. இருவரும் நேற்று ஒரு மொபட்டில் மணப்பாறைக்கு சென்று விட்டு அங்கிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மணப்பாறை-  கோவில்பட்டி சாலையில் புதுக் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராசு படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு 2 ஆம்புலன்சுகள் விரைந்து வந்தன. அந்த ஆம்புலன்சுகளில் எந்த ஆம்புலன்சில் மூதாட்டி உடலை ஏற்றி செல்வது என்பது தொடர்பாக இரு ஆம்புலன்ஸ் ஊழியர்களும் போட்டி போட்டனர்.  பின்னர் ஒரு ஆம்புலன்சில் உடலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ராசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்
2. மயங்கி விழுந்து மூதாட்டி பலி
விசாரணையின்போது மயங்கி விழுந்து மூதாட்டி பலியானார்.
3. கார் மோதி மூதாட்டி பலி
கார் மோதி மூதாட்டி பலியானார்.
4. மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
5. சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.