மாவட்ட செய்திகள்

அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் + "||" + Review meeting

அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சாத்தூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். 
ஆய்வு கூட்டம் 
சாத்தூரில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கலு சிவலிங்கம், இந்திய மருத்துவர் சங்கம் விருதுநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் அறம், சாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மற்றும் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், நகர செயலாளர் குருசாமி, மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
கூட்டத்திற்கு பிறகு  கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக 150 படுக்கை வசதிகள் கொண்ட சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவபடுக்கை வசதிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் கண்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா வார்டு 
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக ஆய்வு பணிகளை மாவட்ட கலெக்டருடன் சேர்ந்து செய்து வருகிறோம். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மாவட்டம் முழுவதும் தயாராக உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இடவசதி தேவையான ஆக்சிஜன் வசதிகளை மாவட்ட கலெக்டர் செய்து வருகிறார். 
சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு 
கொரோனாவில் மருத்துவர்களின் பணி சிறப்பாக இருக்கிறது.
வருகிற 24-ந் தேதிக்கு பிறகு நோயின் தாக்கம் குறைந்தால் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது. இருப்பினும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார். 
இந்த ஊரடங்கினால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா குறித்து தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
2. விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம்-கலெக்டர் தகவல்
விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம் இருப்பதாக ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
3. டவ்தே புயல்: குஜராத், மராட்டிய முதல் மந்திரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய மத்திய மந்திரி அமித்ஷா
டவ்தே புயலை முன்னிட்டு குஜராத், மராட்டிய மாநில முதல் மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு கூட்டம் நடத்தினார்.
4. ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு
கிராம பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்
5. கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்
சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.