மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + arrest

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வாசலூர்பட்டி அருகே உள்ள பெரியசோளிதண்ணிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டில் சரியாக செல்போன் டவர் கிடைக்கவில்லை. எனவே அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்ற வாலிபர் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தலைமறைவான கார்த்திக்கை வலைவீசி தேடி வந்தார். இதற்கிடையே வாசலூர் பட்டியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு கார்த்திக் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து வாசலூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அங்கு வந்த கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பேட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
5. சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.