மாவட்ட செய்திகள்

வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு + "||" + Intensive police surveillance at the Thiruvarur district border near Valangaiman

வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் ேபாலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசின் உத்தரவின்படி வலங்கைமான் பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கின்றன. காலை 10 மணிக்கு மேல் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விடுகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கை மீறி சாலையில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.


கண்காணிப்பு தீவிரம்

ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதால், வலங்கைமான் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தி உள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இ-பதிவு இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர்-தஞ்சை மாவட்ட எல்லையான வலங்கைமான் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றுப்பாலம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு உள்ளதா? என வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

துணை சூப்பிரண்டு ஆய்வு

போலீசாரின் கண்காணிப்பு பணிகளை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே வலங்கைமான் பகுதியில் காரணமில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு
மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு.
2. சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு
சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு.
3. வேதாரண்யம் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா? கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு
வேதாரண்யம் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்ததால்கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.