மாவட்ட செய்திகள்

குன்னூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Fines for not wearing face shield

குன்னூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

குன்னூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
குன்னூரில் முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்,

தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி நேற்று அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையொட்டி குன்னூரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. 

ஆனால் சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை. மேலும் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மொத்தம் ரூ.21 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.