மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் + "||" + spraying work

பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணியில் இருப்பவர்கள், புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க தினமும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை படி, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில், நவீன பெல் மிஸ்டர் கருவி மற்றும் நவீன டிராக்டர் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணி தீவிரமாக நடந்தது.

அப்போது, மேற்பார்வையாளர் சண்முகம், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா, சீதா லட்சுமி, எல்.சி.எப்.கண்ணன், கார்த்திக், அருள் செல்வன், பணியாளர்கள் பாலமுருகன், பெருமாள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

விக்கிரமசிங்கபுரம்

இதேபோல் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் கணேசன் மேற்பார்வையில் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
2. அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
3. வெளி நபர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
4. அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் தயார்
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 780 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி மதுமதி தெரிவித்தார்.