மாவட்ட செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே, தரமற்ற அரிசி வினியோகம்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் + "||" + Near Thiruthuraipoondi, substandard rice distribution: Villagers protest by besieging ration shop

திருத்துறைப்பூண்டி அருகே, தரமற்ற அரிசி வினியோகம்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே, தரமற்ற அரிசி வினியோகம்: ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே தரமற்ற அரிசி வினியோகத்தை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது நுணாகாடு ஊராட்சி. இங்கு உள்ள ஆட்டூர் கிராமம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாகவும், அந்த அரிசியை சமைத்து சாப்பிட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளும் பலமுறை புகார் தெரிவித்தும் தரமான அரிசியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு ஆண்டாக அந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை வினியோகம் செய்வதாக கிராம மக்கள் கூறினர். மேலும் தரமான அரிசியை வினியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சுமார் அரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கிராம சுகாதார நர்சுகள் போராட்டம்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார நர்சுகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
விடுதிக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் 10 நாள் காலஅவகாசம் அளித்து சென்றனர்.
3. தாசில்தார் மீது தாக்குதல்; தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டம்
தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசில்தாரை தாக்கியதை கண்டித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில் சாலை மறியல் போராட்டம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடுகிறது. ரோகித் சர்மா, புஜாரா அரைசதம் அடித்தனர்.