மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் + "||" + Seizure of motorcycles of teenagers in violation of regulations

கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தீவிர வாகன சோதனையில் ஈடுபட செந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலை முதல் செந்துறை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்த வாலிபர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வயதானவர்கள் மற்றும் பெண்களை எச்சரித்து அனுப்பினர். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ் சூப்பிரண்டுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வரி செலுத்தாமல் இயங்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்- ரூ.11½ லட்சம் அபராதம் விதிப்பு
வரி செலுத்தாமல் இயங்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.11½ லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.
2. சென்னையில் கொரோனா ஊரடங்கு தடை மீறல்: வாகனங்கள் பறிமுதல்; வழக்கு பதிவு
சென்னையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3. வாகனங்கள் பறிமுதல்
மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
5. ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.