மாவட்ட செய்திகள்

கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது + "||" + Screaming at a teenager in a carom game; 3 people arrested

கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது.
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி மாயாண்டி காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 22). இவருக்கும், மயிலாப்பூர் ரோட்டரி நகர் 15-வது தெருவைச் சேர்ந்த திலீப்குமார் (23) என்பவருக்கும் இடையே கேரம் விளையாட்டு போட்டியில் முன்பகை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பிரகாசிடம், திலீப்குமார் மற்றும் அவரது நண்பர்களான ராஜேஷ் (23), விக்னேஷ் (24) ஆகிய 3 பேரும் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக திலீப்குமார், ராஜேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது
மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.
2. மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது
மாதவரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இளநிலை உதவியாளரும் பிடிபட்டார்.
3. கர்நாடகாவில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
4. போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. காஞ்சீபுரத்தில் கம்பால் தாக்கியதில் டிரைவர் சாவு; மனைவி கைது
காஞ்சீபுரத்தில் கம்பால் அடித்து தாக்கியதில் டிரைவர் பரிதாபமாக பலியானார். இந்ந வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டார்.