மாவட்ட செய்திகள்

ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது + "||" + 500 oxygen concentrators were distributed in the presence of the Ministers on behalf of the Isha Foundation

ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது

ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது
ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
சென்னை,

ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்டநிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கோவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, டி.ஆர்.ஓ. ராமதுரை உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டும் 500 பி.பி.இ.கிட்கள், 5,000 என்-95 முக கவசங்கள், 500 முக கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு 72 ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கிய வருவாய் கோட்டாட்சியர்
அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 72 ஆக்சிஜன் சிலிண்டர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
2. சென்னை அணுமின்நிலையம் சார்பாக ரூ.1¼ கோடியில் கல்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
சென்னை அணுமின்நிலையம் சார்பாக ரூ.1¼ கோடியில் கல்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வரைவோலையை கலெக்டரிடம் ஒப்படைத்த அணுமின் நிலைய இயக்குநர்.
3. 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது.
4. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
5. தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்
தெற்கு ரெயில்வே மூலம் தமிழகம், கேரளாவுக்கு 2,200 டன் ஆக்சிஜன் வினியோகம்.