மாவட்ட செய்திகள்

சென்னையில், அத்தியாவசிய பொருட்கள் நேரடி வினியோகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு + "||" + In Chennai, Direct Distribution of Essential Commodities: Tamil Nadu Chamber of Commerce Bargaining Monitoring Committees

சென்னையில், அத்தியாவசிய பொருட்கள் நேரடி வினியோகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

சென்னையில், அத்தியாவசிய பொருட்கள் நேரடி வினியோகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
சென்னையில், அத்தியாவசிய பொருட்கள் நேரடி வினியோகத்தை கண்காணிக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை,

கொரோனா பெருந்தொற்று 2-வது அலை தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பையும், தொற்றின் தீவிரத்தைக் குறைக்கவும், வணிக சமுதாயம், அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும், தொய்வின்றியும் அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடைந்திட, இந்த முழு ஊரடங்கு காலத்தில், வீடு தேடி சென்று விநியோகிக்கின்ற வகையில், நடமாடும் காய்கறி வாகனங்களைப் போல அத்தியாவசிய மளிகைச் சாமான்களும் அனைத்து மக்களையும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக, பேரமைப்பின் சார்பில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்டு 21 உறுப்பினர்களை கொண்ட 7 மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட உறுப்பினர்கள்

அதன்படி, தென்சென்னை மேற்கு மாவட்டத்திற்கு, கே.ஜோதிலிங்கம்-98403 96999, வி.ஆனந்தராஜ்-94440 63899, எஸ்.பி.சண்முகசுந்தரம்-90946 86813. தென்சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு என்.டி.மோகன்-94440 50859, ஏ.தேசிகன்-94443 17213, ஜெ.சின்னவன்-988411 5246.

மத்திய சென்னை மாவட்டத்திற்கு எஸ்.சாமுவேல்-98842 75098, ஏ.ஷேக்முகைதீன்-94443 34851, ஏ.சத்திய ரீகன்-93800 25074. வடசென்னை மேற்கு மாவட்டத்திற்கு என்.ஜெயபால்-984072 7403, ஹாஜி கே.முகம்மது-94441 91796, சி.மகேஷ்-98412 90760.

தென்சென்னை வடக்கு மாவட்டத்திற்கு ஒய்.எட்வர்ட்-99623 42111, ஆர்.நீலமேகம்-95001 96127, ஆர்.எம்.பழனியப்பன்-94448 48166, வடசென்னை வடக்கு மாவட்டத்திற்கு பி.வில்லியம்ஸ்-99410 85555, ஜெ.சங்கர்-96771 34563, எஸ்.ராஜாசங்கர்-94442 22091. வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்கு பி.ஆதிகுருசாமி 94444 48788, ஜி.ராபர்ட் 94441 74144, எஸ்.கதிர்வேல் 99623 05677 ஆகியோரை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமை அலுவலக தொடர்பு

இது தவிர, பொதுமக்களுக்கு மளிகை, காய்கறி பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் 044-42128171, 044-24731033 ஆகிய எண்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார்-98400 41414, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி-98417 45999, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன்-8939648946 மற்றும் நிர்வாகிகள் த.பீமராஜன்-9840266234, எஸ்.பி.சண்முகசுந்தரம்- 9094686813, கே.ஏ.மாரியப்பன்-91710 11131, வி.பால்ராஜ்- 98410 55988 ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு மாணவர்களின் வருங்காலமே முக்கியம்: 10, 12ம் வகுப்பு வாரிய தேர்வுக்கு நிபுணர் குழு அமைத்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்பு வாரிய தேர்வு பற்றி முடிவு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
2. பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்