மாவட்ட செய்திகள்

மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccination for petrol station employees on behalf of the corporation

மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மாநகராட்சி சார்பில் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி.
சென்னை,

சென்னையில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 சதவீதம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை செயல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முகாம்கள் அமைத்து, கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வடசென்னை பகுதியில் உள்ள 41 பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, சூளை ராஜாமுத்தையா சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 30 ஊழியர்களும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 120 ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்க பரிசீலனை: அஜித் பவார்
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
2. மேலும் 21 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. புதிதாக பேர் 14 பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. 20 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
5. 18 விலங்குகளின் ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் எதில் உள்ளது? துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு
துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் 18 விலங்குகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் எதில் உள்ளது? என்ற ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.