மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை பிரிவு + "||" + oxygen bed open in tiruppur govt hospital

கொரோனா சிகிச்சை பிரிவு

கொரோனா சிகிச்சை பிரிவு
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பூர் வந்தார்.
காலை 10.48 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்கு முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் காரில் வந்தார். பின்னர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவின் தரத்தை அவர் ஆய்வு செய்தார். திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்கள் நிறுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சேவையை கேட்டறிந்தார்.
கார் அம்புலன்ஸ் சேவை
அதைத்தொடர்ந்து 20 கார் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இருப்பதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து 6 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவ சேவையாற்ற உள்ளனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காலை 11.04 மணிக்கு கோவை புறப்பட்டு சென்றார். 
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சமயமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சக்திவேல், பிரதீப் குமார், குமார் பெரியசாமி, திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்க செயலாளர் முருகசாமி, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
----------------------
குறிப்பு படம் உண்டு.
------------
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு  செய்தபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
--------------------

-----
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவின் தரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர்கள் உள்ளனர். 
---------------