மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகேவிபத்தில் கணவன், மனைவி படுகாயம் + "||" + near kovilpatti, husband and wife injured in accident

கோவில்பட்டி அருகேவிபத்தில் கணவன், மனைவி படுகாயம்

கோவில்பட்டி அருகேவிபத்தில் கணவன், மனைவி படுகாயம்
கோவில்பட்டி அருகே விபத்தில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் மனைவி பாஞ்சாலி (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிவேல், பாஞ்சாலி இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர்  இவர்களை மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மு  தல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கோவில்பட்டி கிழக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா ஆகியோர் தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த பாலையா மகன் முருகையா (வயது 50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.