மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 15 பேர் பலி;புதிதாக 1,128 பேருக்கு தொற்று + "||" + Fifteen people were killed in Corona in Trichy district.

திருச்சி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 15 பேர் பலி;புதிதாக 1,128 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 15 பேர் பலி;புதிதாக 1,128 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலியானார்கள். நேற்று புதிதாக 1,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில்
கொரோனாவுக்கு 15 பேர் பலி
புதிதாக 1,128 பேருக்கு தொற்று
திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நேற்று 1,128 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 10 ஆயிரத்து 816 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலிருந்து பூரண குணமடைந்து 932 பேர் தேர்வு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.