மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி + "||" + 6 people were killed to the corona in a single day

ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி

ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி
நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 387 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் ஒரே நாளில் இறந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 777 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 88 பேர் இறந்தனர். 

மீதமுள்ள 3 ஆயிரத்து 626 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் மொத்தம் 364 ஆக்சிஜன் படுக்கைகளில் 344 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளது. 20 படுக்கைகள் காலியாக இருக்கிறது.