மாவட்ட செய்திகள்

பண்ருட்டி, ராமநத்தம் பகுதியில்சாராயம் விற்ற 6 பேர் கைது + "||" + 6 men arrested for selling booze

பண்ருட்டி, ராமநத்தம் பகுதியில்சாராயம் விற்ற 6 பேர் கைது

பண்ருட்டி, ராமநத்தம் பகுதியில்சாராயம் விற்ற 6 பேர் கைது
பண்ருட்டி, ராமநத்தம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேரை கைது செய்தனர்.
பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்துள்ள காட்டாண்டிக்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பிற்குள் சாராயம் காய்ச்சி  விற்பனை செய்யப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது  தர்மலிங்கம் என்பவரது முந்திரிதோப்பிற்குள் சாராயம் காய்ச்சிய  திடீர் குப்பத்தை சேர்ந்த  ராமர் மகன் குப்புசாமி (வயது 37), தங்கராசு மகன் கணேசன் (55) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.  அங்கிருந்த சாராய ஊறலை அழித்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 இதேபோல் காடாம்புலியூர் அடுத்துள்ள நெல்லித்தோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(32) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் சமேதா கைது செய்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.

இதேபோல்  ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  கல்லூரில் பிளாஸ்டிக் பையில் சாராயத்தை வைத்து விற்பனை செய்த கணேசன் மகன் சதிஷ் குமார் (21), ஆறுமுகம் மகன் சீனிவாசன் (20)  வெங்கடேசன் (32)  ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும் தப்பி ஓடிய  கருப்பையா மகன் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.