மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை:ஓமியோபதி கிளினிக்குக்கு ‘சீல்’ + "||" + 'Seal' for homeopathy clinic

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை:ஓமியோபதி கிளினிக்குக்கு ‘சீல்’

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை:ஓமியோபதி கிளினிக்குக்கு ‘சீல்’
ஓமியோபதி கிளினிக்குக்கு ‘சீல்’
தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் பழைய பஸ் நிலையத்தில் ஓமியோபதி டாக்டர் சீதாராமன் (வயது 70) என்பவர் கிளினிக் வைத்துள்ளார். இவரது கிளினிக்கில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மருத்துவம் பார்த்ததாகவும், மருந்து விற்பனை செய்து வந்ததாகவும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் லத்தீஷ்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை செய்ததை அறிந்த அதிகாரிகள் குழுவினர் ஓமியோபதி டாக்டர் சீதாராமனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கிளினிக்கை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.