மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல் + "||" + Those who have failed to renew their employment office registration can also apply online

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்.
சென்னை,

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீரராகவராவ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28-ந்தேதி முதல் 3 மாதங்களுக்குள் அதாவது, வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.

அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி வரை பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் ஐகோர்ட்டில், அரசு அறிக்கை
கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் ஐகோர்ட்டில், அரசு அறிக்கை.
2. சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
3. அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெற்ற பட்டத்தை பரிசீலிக்க முடியாது
அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெறப்பட்ட எம்.ஏ. பட்டத்தை பரிசீலிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
5. நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது மாமல்லபுரம் போலீசார் தகவல்
நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டதாக மாமல்லபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.